Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசின் சாதனைகள் தொடரவும், தொகுதியின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ்

0

'- Advertisement -

துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு.

Ad banner

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரும், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அமைச்சர் அவர்கள் பின்வரும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்: வலியடி கருப்பண்ண சுவாமி கோவில் தெரு , துவாக்குடி வடக்கு மலை மற்றும் தெற்கு மலை, செடி முருகன் கோவில் தெரு ,  அண்ணா வளைவு பள்ளிவாசல் தெரு ,வ.உ.சி. நகர், வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் பொதுமக்கள் மத்தியில் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்:

2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் தமிழக அரசின் “திராவிட மாடல்” ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விளக்கினார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து துவாக்குடி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள், முடிவுற்ற கட்டுமானங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

அரசின் சாதனைகளைத் தொடரவும், தொகுதியின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் துவாக்குடி நகரமன்றத் தலைவரும், நகரச் செயலாளருமான காயாம்பு, வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.