திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு.

பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் .
2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற பாஸ்கர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு வீட்டின் உள்ள சென்ற போது
பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க மோதிரம்,தங்க கொக்கி மற்றும் வெள்ளி விளக்கு, பணம் 2 ஆயிரம் என ரூபாய் 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசருக்கு பாஸ்கர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.
மற்றொரு வீட்டில் திருட்டு.
இதே போன்று திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லி தெருவை சேர்ந்தவர் சையது ஜெய்லானி இவரது மனைவி ஜமீன் பேகம் (வயது 59) இவர் கடந்த மார்ச் 28ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு
பீரோவில் இருந்த ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பணம் ரூ.3 ஆயிரம் என ரூ .76 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போய் உள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஜமீன் பேகம்
போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் இரண்டு சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவ பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

