திருச்சி நீதிமன்றத்தில் இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.

வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி. முத்துமாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.இப்போது 136 -வது தலைவர் ,செயலாளர்,பொருளாளர்,துணைத் தலைவர்கள் இரண்டு பேர்,இணைச் செயலாளர்கள் இரண்டு பேர்,செயற்குழு உறுப்பினர்கள் என 10 நபர்களுக்கான பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியன்,தனபால் ஆகிய இரண்டு பேரும்,செயலாளர் பதவிக்கு தீனதயாளன்,
ஆரோக்கியசாமி,ராஜா,,கண்ணன் ஆகிய நான்கு பேரும், பொருளாளர் பதவிக்கு சுதர்சன், பிரதீப் ஆகிய இரண்டு பேரும்,துணைத் தலைவர்கள் பதவிக்கு மதியழகன், புவனேஸ்வரி உட்பட பலரும், இதேபோல் இணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர்.இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்களது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்குகள் சேகரித்தனர்.
இதையடுத்து வாக்குப்பதிவு மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு இன்று மாலை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வக்கீல்கள் சங்க தேர்தலை ஒட்டி திருச்சி நீதிமன்ற வளாகமே இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

