திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு சாலை பகுதியில் கடந்த பத்தாம் தேதி (வெள்ளிக்கிழமை அன்று) ஒரு இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றது. அதில் பின்னே அமர்ந்திருந்த நபர் பயங்கர கூர்மையான ஆயுதங்களை தரையில் உரசி சாலையில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கன்டோன்மென்ட் காவல் நிலையம் போலீசார் கண்காணிப்பு கேமரா தரவுகளின் அடிப்படையில் பொது போக்குவரத்தை பாதிக்கும் விதமாக வாகனம் ஓட்டிய நபர் யார் அவரது பின்னே அமர்ந்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

