திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா (வயது 19 ) என்ற பெண்ணிற்கும் திருமணமானது.
இருவரும் திருச்சி ஸ்ரீரங்கம் ஐயர் தோப்பு பகுதியில் வீடு எடுத்து தங்கி வசித்து வந்து உள்ளனர்.
சிவசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது..
இதனால் மனைவி பிரியா கோவித்துக் கொண்டு தன்
பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.சிவசங்கர் தனது மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார் ஆனால் அவர் வரவில்லை என கூறப்படுகிறது . இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசங்கர் நேற்று தன் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

