Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது

0

'- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

வருகின்ற 17ஆம் தேதி விடியா திமுக ஆட்சியில் நிலவக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து வருவாய் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

அதன் அடிப்படையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் வருகின்ற 17 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

இதனை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

 

மேலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு கழகப் பணியாற்றி தேர்தல் வெற்றியை கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் பொற்கரங்களில் சமர்ப்பிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் அறிக்கையை வீடு வீடாக சென்று மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ப.குமார் அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் .சின்னசாமி மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இராவணன் வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் C.பழனிச்சாமி, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் N.அன்பரசன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால் ராஜ் பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் , அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, காட்டூர் பகுதி செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன்

,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எத்திராஜ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி மேரி சார்ஜ் மாவட்ட பாசறை மாவட்ட செயலாளர் சீகை. சந்துரு மற்றும் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.