Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனோகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து ஒரு தொகுதியை இப்போதே வெற்றி தொகுதி என எடப்பாடி பழனிச்சாமி கணக்கை தொடங்க வேண்டும்.

0

'- Advertisement -

திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கலந்து சொந்த தொகுதி என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு 3 வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

 

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்று முதல்வராக இருந்த ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த பின்பு 2015 ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அப்போதைய மாவட்ட செயலாளரும்,ஸ்ரீரங்கம் பொறுப்பாளருமான ஆர்.மனோகரன் தான் மாமன்ற உறுப்பினரான வளர்மதியை பரிந்துரை செய்தார்.வளர்வதியும் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.அந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சரானார் வளர்மதி .ஜெயலலிதா மறைவுக்குப் பின் பழனிச்சாமி அமைச்சரவையிலும் அமைச்சராக தொடர்ந்து செயல்பட்டார்.இதற்கெல்லாம் முன்னால் அரசு தலைமை கொறடா மனோகரன் தான் காரணம்.

 

ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் அதிகம் என கூறி பரஞ்சோதி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பரிந்துரை பேரில் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு 25 ஆண்டுகளுக்கு பின் திமுகவுக்கு தாரை வார்த்த நிகழ்வு நடைபெற்றது.தற்போது கு.ப. கிருஷ்ணன் அதிமுகவில் இல்லை.திமுகவின் பழனியாண்டி பத்திரிகையாளரை தாக்கிய சம்பவத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக எதிர்ப்பு ஆலை வீசி வருகிறது.இந்த நிலையில் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் மனோகரன்,வளர்மதி ஆகியோர் சீட் ரேசில் முன்னணியில் உள்ளனர்.ஆனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் பணிகளை கவனிங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனோகரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.முத்தரையர் அல்லாதவர் ஜி எம் தொகுதியில் வெற்றி பெற முடியாது என மேல் இடத்திற்கு தகவல் சென்றாலும்,அதிமுகவுக்கு ஜாதி, மதம் பார்த்து யாரும் வாக்கு அளிப்பதில்லைஇரட்டை இலை சின்னம் மட்டுமே போதும் என மேல் இடத்திலிருந்து அறிவுறுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது. 2021ல் தோல்வி அடைந்த குப.கிருஷ்ணன் முத்தரையர் தானே ஏன் அவர் வெற்றி பெறவில்லை.ஸ்ரீரங்கம் தொகுதியில் படித்தவர்கள் அதிகம் எனவே அவர்களுக்கு வேட்பாளர் யார் என பார்த்து வாக்களிக்க கூடியவர்கள் .

மனோகரன் மக்களிடம் நன்கு அறிமுகமானவர்.எளிதாக அனைவரிடமும் பழகக் கூடியவர்.இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் மனோகரன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என நடுமையான அதிமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.

 

மண்ணச்சநல்லூர் தொகுதியில் முத்தரையர் அதிகம் உள்ள நிலையிலும் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த மாவட்ட செயலாளராக இருந்த பரஞ்ஜோதி மைனாரிட்டி கதிரவனிடம் தோல்வி அடைந்தார் என்பதை மேல் இடத்துக்கு தெரிவித்து ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட மும்முறமாக பணியாற்றி வருகிறார் ஆர்.மனோகரன்.திருச்சி அதிமுகவில் சீனியர் ஆன மனோகரனுக்கு ஸ்ரீரங்கம்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து திருச்சியின் 9 தொகுதியில் ஒரு தொகுதியை இப்போதே வெற்றி தொகுதி என எடப்பாடி பழனிச்சாமி கணக்கை தொடங்க வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாகும் ….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.