Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .

0

'- Advertisement -

திருச்சி பாலக்கரையில் மீண்டும் கொடிகட்டி பறக்கும் லாட்டரி .

Ad banner

கட்டு,கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் கைது செய்த போலீசார்.

காந்தி மார்க்கெட் போலீசார் நடவடிக்கை.

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3ம் நம்பர் லாட்டரி நம்பர் எழுதிக் கொண்டிருந்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 45). பாலக்கரையை சேர்ந்த கோபிநாத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி நம்பர்கள் எழுதி பெற்ற பணம் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 600- ஐ போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.