ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் வழங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் குமார்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சூழுரைத்து மக்களுக்காகவும், கழகத்திற்காகவும் தன்னை அர்பணித்து வாழ்ந்து மறைந்தும் நம் இதயத்தில் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் தங்கத்தாரகை வீரப் பெண்மணி இரும்பு பெண்மணி தமிழகத்தின் ஒப்பற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் 78-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் ,
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா.
மாவட்ட அம்மா பேரவை மற்றும் 43A வட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், வட்ட செயலாளர் RPG.கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் காட்டூர் பகுதி செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் எஸ்.கே .டி. கார்த்திக்,
அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முத்துச்செல்வன், வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், அபிமன்யு, ரமேஷ்குமார், ஒரந்தை ஜெயராஜ், பிரேம்குமார், காட்டூர் மணி, மற்றும் கோவிந்தராஜ் , அண்ணாதுரை, அரியமங்கலம் சீனிவாசன், பெல் ஐயப்பன், காமு, முகேஷ் முத்துச்செல்வன், ஆண்டவர் அப்துல்லா, ஜானகிராமன், ராஜு ரெங்கசாமி, அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

