Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வன்னியர்கள் ஓட்டு தேவையில்லை. திருச்சி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி . அதிமுகவினர் அதிர்ச்சி.

0

'- Advertisement -

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தனது சமுதாயத்திற்கு சாதகமாகவும் மாற்று சமுதாய அதிமுக நிர்வாகிகளை அலட்சியப்படுத்துவதாகவும் தகவல் வந்தது.

 

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ஸ்ரீரங்கம் தொகுதியில் குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் மட்டுமே சுமார் 10,000 மேற்பட்ட வன்னியர்கள் சமுதாய ஓட்டு உள்ளது.

 

கீதா நகர், மங்கம்மா நகர்,சங்கர் தோப்பு,திருவானைக்கோவில் ரோடு இப்பகுதியில் அதிக அளவு வன்னியர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

இதனால் இந்த பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் வட்ட செயலாளராக இரண்டு வன்னியர்களை நியமித்து உள்ளார் திமுக அமைச்சர் கே.என்.நேரு.

 

ஆனால் அதிமுகவில் நெடுங்காலமாக வட்ட செயலாளராக பணியாற்றி வந்த வன்னியர் சமுதாய வட்டச் செயலாளரை நீக்கிவிட்டு கட்சிக்கு வந்து சில வருடங்களே ஆன ஒரு முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த ஓர் நபரை வட்ட செயலாளராக ஆக்கி உள்ளார்.கீதாபுரம்,வீரசேகரபுரம் மற்றும் திருவானைக்காவல் என இரண்டு வட்ட செயலாளர்கள் தேவை.திமுகவில் மூன்று பகுதி செயலாளர் உள்ளனர்.அதேபோல் அதிமுகவிலும் மூன்று பகுதிகளாக உருவாக்கி அதில் ஒருவரை வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரை பகுதி செயலாளராக நியமித்தால் வன்னியர் சமுதாய ஓட்டுகள் அதிமுகவுக்கு தான் வந்து சேரும்.

 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலின் போது கீதாபுரம் பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக சம்பத் அவர்களை நியமித்தார் ஜெயலலிதா.அதுபோல் திமுக சார்பில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பொறுப்பாளராக பணியாற்றினார்.வன்னியர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் வன்னியர்கள் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர்.

 

தற்போது நான்காவது வார்டில் பொன்னர் என்ற வட்டச் செயலாளர் இறந்ததால் அந்த வார்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்து ஒரு வருடம் கூட ஆகாத ஒருவரை (முத்தரையர்) (தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதியில்) சமுதாய ரீதியாக வட்ட செயலாளராக நியமித்து உள்ளார்.

 

ஒரு பகுதி செயலாளர் மாவட்ட செயலாளர் உடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் அவர் உடனே இருக்கும் ரஜினி மன்றத்தில் இருந்து அதிமுக வந்த ஆர்.வி.ரவிசங்கரை அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொள்வார்.ஏனென்றால் எல்லாம் சமுதாய ஒற்றுமை தான்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் வளர்மதி போட்டியிட்டு இருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பார். எங்க மீண்டும் வெற்றி பெற்று நம்மை விட பெரிய ஆளாகி விடுவார் என்று எண்ணி கு.ப.கிருஷ்ணனை போட்டியிட வைத்து ஸ்ரீரங்கம் தொகுதியை அதிமுக இழக்க முக்கிய காரணமாக இருந்தவர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தான்.

இந்த முறையும் ஸ்ரீரங்கம் தொகுதி வளர்மதிக்கு கிடைத்து விடாமல் செய்ய இப்பொழுதும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. (இவர் கொண்டு வந்த கு.ப.கிருஷ்ணன் தற்போது விசில் அடித்துக் கொண்டுள்ளார்)

 

அதிமுக முக்கிய நிர்வாகி இல்லாமல் ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வேர்வையாக சிந்தி மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க உழைத்து வருகிறார்கள்.

 

மணச்சநல்லூர் தொகுதியில் பரஞ்ஜோதி போட்டியிட்ட போது திமுக வேட்பாளர் கதிரவன் உடன் டீலீங் பேசி மகனுக்கு இலவசமாக டாக்டர் சீட் பெற்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

பத்திரிகையாளர்களை தாக்கிய நபர் முத்தரையர் என்பதால் அவர் எதிர் கட்சியை (திமுக சட்டமன்ற உறுப்பினர்) சேர்ந்தவர் என்றாலும் கூட ஒரு எதிர்ப்பு தெரிவிக்காமல், மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த பத்திரிகை பார்த்து ஆறுதல் கூட கூறாதவர் பரஞ்ஜோதி .

திமுகவினர் உடன் ரகசிய தொடர்பில் உள்ளது தெரிந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மிகவும் வருத்தம் அடைந்து கூறப்படுகிறது.

தற்போது ஸ்ரீரங்கத்தில் 50 வன்னியர் சமுதாயத்தினர் அதிமுகவில் இருப்பார்கள்.அதில் பொதுக் குழு உறுப்பினர்,வட்டக் துணை செயலாளர் போன்ற சாதாரண பதவிகளை நான்கு ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கி உள்ளார்.

 

இதேபோன்று தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கத்தில் மட்டும் வேலூர் முதல் கிளிக்கூடு வரை 12000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.மொத்தமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் 20 ஆயிரக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.ஆனால் இந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி என கூறப்படுகிறது.

 

ஒவ்வொரு பதவிக்கும் இந்தப் பதவிக்கு எவ்வளவு நீ தருகிறாயோ அதைவிட மேல் தருவதற்கு ஆள் இருக்கிறது எனக் கூறி தற்போது நியமிக்கப்பட்டுள்ள வட்ட செயலாளர்கள் உள்ளபட அனைவரிடமும் பெரும் தொகை வசூல் செய்து உள்ளார்.

 

ஒரு ஒன்றிய செயலாளர் தனது இல்ல திருமண நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளுக்கு பத்திரிக்கை வைத்தால் அந்த நிகழ்ச்சிக்கு வர வீட்டில் செலவு ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை தர வேண்டுமென வசூல் செய்து வருகிறாராம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி.

எனவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீரங்கம் தொகுதியில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி குறித்த இந்த செய்தி குறித்து தீர விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி இது என கூறமுடியும் என்று ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.