திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம்
7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த
58 வயது உறவினர் கைது.
சிறையில் அடைப்பு.
திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்து உள்ளது.
அப்போது ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையை தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த அந்த குழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

