பத்திரிகையாளர்களை தாக்கிய திமுக எம் எல் ஏ பழனியாண்டி தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆறுதலும், கண்டனமும் தெரிவிக்காத முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் .
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்த போதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க நேற்று திருச்சி நியூஸ் தமிழ் மண்டல செய்தியாளர் கதிரவன் தனது கேமரா மேன் செபாஸ்டின் உடன் சென்றார்.
இவர்கள் செய்தி சேகரிக்க வருவதை அறிந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அவரது அடியாக்கள் நிருபர்களை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது கனிமவள கொள்ளை கும்பல் நிருபர் கதிரவன்,ஒளிப்பதிவாளர் செபாஸ்டின்,வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்களை சுற்றிவளைத்து தாக்கியது. கேமரா, மைக் உள்ளிட்ட உபகரணங்களை பிடுங்கிய அவர்கள் நிருபர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குவாரி பகுதியில் இருந்து நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு மணி நேரத்திற்குப் பின் படுகாயங்களுடன் 4 பேரும் மீட்கப்படனர்.
காயம் அடைந்த அனைவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்து அதிமுக பொது செயலாளர் தாக்கியவர் மீது கண்டனத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார் என கூறினார்.
இந்த நிலையில் தனது மாவட்டத்திற்கும்,தொகுதிக்கும் உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ,முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி ஆகியோர் திருச்சி மாநகரத்தில் இருந்து கொண்டே காயமடைந்த நிருபர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவும் இல்லை,தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
ஏனென்றால் தாக்கியவர் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர் ,இவர்களும் அதை சமுதாயத்தை சேர்ந்தவர்கள்,வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமுன்னு அளித்து உள்ளனர்,இந்த நிலையில் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த திமுக எம் எல் ஏ பழனியாண்டிக்கு எதிராக செயல்பட்டால் எங்கே நமது வெற்றி வாய்ப்பு குறைந்து விடுமோ என எண்ணி அடிபட்ட நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை இவர்கள் .
இதில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவபதியும் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அனைத்து பொது மக்களுக்கும் சேவை அளிக்க கூடிய ஒருவர்.அவர் எந்த ஜாதி மத வேறுபாடும் இன்றி செயல்பட வேண்டும்.அப்படி இருக்க வேண்டிய நிலையில் தனது சமுதாயத்தை சேர்ந்த திமுக எம்எல்ஏ காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதை கண்டிக்காத அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு எப்படி வெற்றி பெறுவார்கள் என்பதை அனைவரின் கேள்வி.

