திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்
காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் புது தெரு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுப் பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்த போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

