Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

'- Advertisement -

திருச்சிராபள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம்

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் சரகத்தில் உள்ள தாய் மற்றும் கும்பக்குடி கிராமங்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம் .

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய சரகத்தில் உள்ள 08 தாய் கிராமம் மற்றும் 20 குக்கிராமங்களை கண்காணிக்கும் பொருட்டு கிராம கண்காணிப்பு குழு கூட்டம் இன்று புதன் கிழமை 14.01.2026 ம் தேதி மாலை 18.00 மணிக்கு நடத்தபட்டது

 

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

1. மாணவர்கள் பள்ளி பயலும் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட (புகையிலை ஹான்ஸ் குட்கா பாக்கு கஞ்சா ) போதை பொருட்களை தனிப்பட்ட நபர் யாரேனும் விற்பனை செய்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

2. மதுபானங்களை தனிப்பட்ட நபர் யாரேனும் விற்பனை செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

3. கிராமங்களில் ஏதேனும் குற்றம் நடைபெறாமால் இருக்க ஒவ்வொரு தெருக்களிலும் CCTV கேமரா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

4. கிராமங்களில் யாரேனும் புதுநபர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் ஏதேனும் இருப்பின் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

5. தங்கள் பகுதிகளில் குழந்தை திருமணம் (ஆண் & பெண்) ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

6. தங்கள் கிராமங்களில் அபாயகரமான பொருட்கள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

7. அரசுக்கு எதிராக மணல் கடத்தல் சம்மந்தமாக ஏதேனும் தகவல் இருப்பின் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

8. காவலர் உதவி செயலி சம்மந்தமாக தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அவர்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெற அவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவேண்டும்.

 

9. இரவு நேரங்களில் வீட்டில் வெளியே மின்விளக்கு வெளிச்சம் போட்டு வைத்திருப்பதன் மூலம் குற்றம் நடைபெறுவதை தடுக்க ஏதுவாக இருக்கும்.

 

10.வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு பூட்டிய வீட்டின் விபரத்தை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

11.தங்கள் பகுதிகளில் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதோ சூதாட்டம் விளையாடுவதோ மேலும் தேவையற்ற வகையில் பொது இடங்களில் ஆபாசமாக பேசுவது நடந்து கொள்ளும் நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

 

நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா கேட்டுக்கொண்டார்.

 

மேற்படி கிராம கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கூட்ட அறிக்கையினை தெரிந்து கொண்டோம்.

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையுடன் சேர்ந்து கிராம கண்காணிப்பு குழுவினர் உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக்ககொள்கிறோம் பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.