திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி நேர்காணல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கினர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்கள் அளித்தனர். இருந்தனர்.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேர்காணல் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், நேர்காணலை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று காலை, சேலம் மாநகர், சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமும் நேர்காணல் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை முதல் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டம் மற்றும் மாலை திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில்
இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விருப்ப மனு அளித்த மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,மாவட்ட பொருளாளர் ராஜசேகரன்,ஆவின் முன்னாள் சேர்மன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்,அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி,மலைக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எஸ்பி வேலுமணி,திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் இந்த முறை அதிமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என மாவட்டம் செயலாளர் சீனிவாசன் நேர்காணல் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

