திருச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில்
உயிர்த்துளி இரத்த மையத்திற்கு
நடமாடும் இரத்த தான வாகனம்.
ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நடமாடும் ரத்ததான வாகனம் உயிர்த்துளி ரத்த மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது .
சமூக நலன் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சென்ற வருட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமையில் வருங்கால ஆளுநர் ஆர்.பி.எஸ் மணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடமாடும் ரத்ததான வாகனம் கட்டமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனம் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரத்ததான முகாம்களை எளிதாக நடத்த முடியும். அவசர காலங்களில் தேவையான ரத்தத்தை விரைவாக சேகரித்து, உயிர்களை காக்கும் முக்கிய சேவையாக இது செயல்படும்.
இந்த விழாவில் ரோட்டரி மாவட்டம் 3000 -ன் வருங்கால ஆளுநர்கள் லியோ பெலிக்ஸ், மீனா சுப்பையா, ஏ.ஆர்.எப்.சி டோட்டேரியன் டாக்டர் ஜமீர் பாட்ஷா, டி.ஆர்.எப்.சி ரோட்டேரியன் கண்ணன், உயிர்த்துளி இரத்த மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நடமாடும் ரத்த வங்கிக்கு முதன்மைத் தொகுப்பாளராக ரோட்டேரியன் சுபா பிரபு, இரண்டாம் தொடர்பாளராக ரோட்டரியன் முகமது தாஜ் ஆகியோர் இணைந்து இந்த குளோபல் பிராண்ட் உலக நிதி நிறுவனத்தில் இந்த திட்டத்திற்கு தேவையான தொகையை பெற்றுத் தந்தனர்.

