நாளை திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர்.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு .

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (02/01/2026) வெள்ளிக்கிழமை காலை
8 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து திருச்சி மாவட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைபயணத்தை துவக்கி வைக்க வருகை தர உள்ளார்கள் . அவரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் திருச்சி விமான நிலையம் முதல் குட்செட் மேம்பாலம் வரை உற்சாக வரவேற்ப்பு தர உள்ளோம் . 
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். 
என அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

