திருச்சியில் நடந்த துணிகரம் சம்பவம் :
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , பணம் கொள்ளை.
மர்ம ஆசாமிகளுக்கு அரசு மருத்துவமனை போலீசார் வலை வீச்சு.
திருச்சி வயலூர் ரோடு சண்முக நகர் 4வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது66). இவர் சம்பதவன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று உள்ளார்.
,பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

