நாளை எம்ஜிஆரின் 38-வது ஆண்டு நினைவு நாள்.அன்னாரது சிலை/படங்களுக்கு அனைவரும் மரியாதை செலுத்தி,ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.அதிமுக மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் ,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது ஆண்டு நினைவு நாளான 24.12.2025, புதன்கிழமை காலை 9 மணி அளவில் பெல் வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது அது சமயம் மாவட்ட, ஒன்றிய, நகர , பகுதி,பேரூராட்சி, கிளை, வார்டு, வட்ட கழகத்தில் பல்வேறு சார்பு அணிகள் நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோன்.
மேலும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் எம்ஜிஆர் அவர்களுடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி, நினைவஞ்சலி செலுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறேன். 
அதுசமயம் , மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்வீரர்கள், வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

