திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் கைது.
திருச்சி :தனது விட்டில் சாய்ந்த செடியின் கிளையை வெட்டிய வெட்டிய சம்பவம்.
பாலக்கரையில் அண்ணன் தம்பியை அருவாளால் வெட்டிய அகில இந்திய பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் கைது.
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். பழனியப்பன் அவரது வீட்டில் ஒரு செடியை வளர்த்துள்ளார். அந்த அந்தச் செடியின் இலைகள் நாகராஜன் வீட்டில் விழுந்துள்ளன. இதனால் நாகராஜ் இந்த செடியை வெட்டி உள்ளார். இதை பழனியப்பன் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.
அப்போது நாகராஜ் பழனியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் பழனியப்பனின் மகன்களான நரேஷ் குமார் (வயது 24) மற்றும் கமலேஷ் (வயது 21) ஆகிய இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார் இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து 2 பேரும் காயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பழனியப்பன் பாலக்கரை காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

