Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றும் தமிழகத்தில் ரூ.25 சாராயம் கிடைக்கிறது. அரசின் வருவாயை திமுகவினரே கெடுத்து வருகின்றனர்.திருச்சியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா.

0

'- Advertisement -

அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்று .

நேற்று மாலை திருச்சி மத்திய நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மத்திய மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நிறுவனத் தலைவர் புரட்சி தமிழ்ச்சி மூ.ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல பொறுப்பாளர் S.M.முகம்மது காசிம்,மாநிலத் துணை பொது செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொது செயலாளர் வீணா,மாநில பொருளாளர் மரிய விஜய் ஆனந்த்,மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வசேகர்,மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்.காசிநாததுரை மதுரை மாவட்ட செயலாளர் இராஜேஷ்,நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சினேகா,கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சதீஸ்குமார்,விருதுநகர் மாவட்ட செயலாளர்.ஆனந்தராஜ்,தேனி மாவட்ட செயலாளர் பார்த்தீபன்,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கார்த்திக்,ஜோசப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஹென்றி,திண்டுக்கல் மாவட்ட செயலரளர் இராஜபாண்டி, மற்றும்மத்திய, தென் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறும் போது :-

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளோம்.எங்கள் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பேச்சுவார்த்தை முடிஞ்ச பின்பு அது குறித்து அறிவிப்போம். தற்போது தமிழக முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களப்பணியாற்ற தொடங்கிவிட்டோம்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் பெருகி விட்டன,தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த தவறி விட்டார். தமிழகத்தில் 24 மணி நேரமும் மது எளிதாக கிடைக்கிறது. அதுவும் இரவு நேரத்தில் தமிழகம் முழுவதும் பாண்டிச்சேரி மதுபானங்கள் தான் விற்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பார்களை நடத்துவது அனைத்தும் திமுக நிர்வாகிகள் தான்.இதனால் தமிழக அரசுக்கு மதுபானங்கள் மூலம் வரும் வருவாயை திமுகவினரே கெடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும் உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி சாராய சாவுகளுக்கு பின் தமிழகத்தின் மொத்தமாக கள்ளசாராயம் ஒழிக்கப்படும் என முதல்வர் கூறினார் ஆனால் எங்கள் ஊரில் (நாகப்பட்டினத்தில்)இன்றும் 25 ரூபாய்க்கு கள்ள சாராய பாக்கெட்டுகள் எளிதாக கிடைக்கிறது. தமிழகத்தில் மது குட்கா மற்றும் கஞ்சா மட்டுமே கிடைத்து வந்தது ஆனால் தற்போது காஃவீன்,கோக்கைன்,எத்தனால்,நிக்காட்டீன்,அபினி என கேள்விப் படாத போதை பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உளவுத்துறையை மீறி இந்த போதைப் பொருட்கள் எப்படி விற்பனைக்கு வருகின்றது.

நீதிமன்றங்களில் ஏழை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ வழக்குகளில் சிக்கும் பணக்காரன் வெளியே வந்து விடுகிறான் ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதில்லை.பாதிக்கப்பட்டவர்கள் பணக்காரர்கள் என்றால் தமிழக அரசு மேல்முறையீடு செய்து வருகிறது.ஏன் தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஏழை பொதுமக்களுக்காக மேல்முறையீடு செய்வதில்லை.இது போன்ற செயல்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை கண்டிப்பாக தரும்.வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் மீடியாக்கள் செயல்பட்டு வருகின்றது.எங்களைப் போன்ற வளரும் கட்சிகளுக்கு ஆதரவாக ,நாங்கள் சொல்லும் செய்திகளையும் எந்த மீடியாக்களும் வெளியிடுவதில்லைஇது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது எனவும் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.