திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட அனைத்து தரப்பு மக்களிடம் எளிதாக பழக கூடிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி விருப்ப மனு
2026 ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை தொடர்ந்து விருப்பமுனு தாக்கல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என பொதுமக்கள் இடையே கருத்து நிலவுவதால் அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சருமான
எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்ததைவிட அதிகமான அதிமுக தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர் .
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டி 
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான புங்கனூர் கார்த்தி அதிமுக தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு அளித்தார்.


இந்த நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருப்ப மனு வினியோகம் வருகிற 23ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடக்கிறது. விருப்ப மனு விநியோகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

