பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி முத்தரையர்கள் சார்பில் கோடான கோடி நன்றி.கே.கே. செல்வகுமார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி முத்தரையர்கள் சார்பில் நன்றி.
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் பெருமிதம் .
வீர முத்தரை சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
மன்னர்களில் மாமன்னராக திகழ்ந்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கிய மன் னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் எமது குலச் சாமியின் ஆட்சி முறையை, தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டை, வீரத்தை உலகுக்கு பறை சாற்றும் வகையில் மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என நாடாண்ட முத்தரையர் சமூகம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தது. அதைத் தொடர்ந்து பேரரசரின் 1350-வது சதய விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி டெல்லி குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் பேரரசரின் சிறப்பு அஞ்சல் தலை வெளியி டப்பட்டது. இந்த
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எம் வாழ்நாளில் மறக்க முடியாத பெரு நிகழ்வாக, நெஞ்ச மெல்லாம் நிறைந்திருக்கிறது. பேரரசரின் அஞ்சல் தலையை வெளியிட்டு துணை குடியரசு தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் சிறப்புரையாற்று கையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, பேரரசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டதன் மூலம் நாடே பெருமை
கொள்வதாக புகழாரம் சூட்டினார்.மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சியாக இருந்து, தன்னுடன் கே.கே. செல்வகுமார் இணைந்து பணியாற்றினார் என குறிப்பிட்டு பாராட்டி நினைவு கூர்ந்தது. மேதகு துணை குடியரசுத் தலைவரின் நன்றி உணர்வை, பெருந்தன்மையை வெளிப் படுத்துவதாக இருந்தது.
மத்திய அரசுக்கு நன்றி :
முத்தரையர்களின் பன்னெடுங்கால கோரிக்கையை ஏற்று அஞ்சல் தலை வெளியிட்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், பேரரசருக்கு தபால்தலை வெளியிட வலியுறுத்திய தமிழக அரசுக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சி சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கே.கே. செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

