உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.
உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி
இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர்.கே .சி நீலமேகம் தலைமை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பலதா முன்னிலை வகித்தார்.
உலக மண் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக மண் தினம் 2025, “ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்” என்ற கருப்பொருளுடன் நகர்ப்புற நிலப்பரப்புகளில் கவனம் செலுத்துகிறது. நிலக்களில், கட்டிடங்கள் மற்றும் தெருக்களுக்கு அடியில் மண் உள்ளது, அது ஊடுருவக்கூடியதாகவும் தாவரங்களுடனும் இருந்தால், மழைநீரை உறிஞ்சவும், வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும், கார்பனை சேமிக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் மரக்கன்றுகள் வழங்கி மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றி உறுதி மொழியை வாசித்தார்.
உறுதி மொழியில் மண்வளம் காத்திட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பெற்றோர்களைப் போல பாதுகாக்க வேண்டும் அத்தகைய மண்ணில் நாட்டு மரங்களை நட்டு வளர்த்துப் பள்ளியில் சூழலியலைப் பேணி வளர்த்திட வேண்டும் என்று மாணவரிடம் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் ஆர்.கே.ராஜா மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

