லால்குடி தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் .
திருச்சி அ இ அ தி மு க புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, அப்பகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மற்றும் அதிமுகவை சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர் -2 (BLA-2) அவர்களிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணி விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் T.N.சிவகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளனூர் பாண்டியன் ,கோவிந்தசாமி,தினேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான உடனிருந்தனர்.

