திருச்சி பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள்.
திருச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.26 ஆயிரம் பணத்தை
மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவிச்சு.
திருச்சி பிராட்டியூர் தீரன் நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது .இந்த பெட்ரோல் பங்கில் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த பெரியார் செல்வன் (வயது 40) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் .
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வசூலான 26 ஆயிரத்து 298 ரூபாய் பணத்தை ஒரு பையில் பெரியார் செல்வன் வைத்திருந்தார்.
அப்பொழுது ஊழியர் ஒருவர் வாகனம் ஒன்றுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருக்கும் பொழுது இரண்டு மர்ம ஆசாமிகள் பெட்ரோல் பங்க் அருகில் வந்து பெட்ரோல் போடுவது போல் நின்று கொண்டு பணப்பை அருகில் சென்று திடீரென்று பணப்பையை திருடிக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியார் செல்வன் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார் அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் பங்கில் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

