Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்ல திருமணத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவால் முடியாததை முடிப்பாரா? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் .

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின்

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

 

திருச்சி வரும் தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்

 

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அன்போடு வரவேற்கிறோம். இத்தகைய அற்புத தருணத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகாவல் பகுதியை சுற்றி பல நூறு ஆண்டுகளாக ஆண்டவனுக்கு சேவை செய்து வரும் அடியார்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி பல்வேறு சட்ட பிரச்சினைகளாலும், பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால் சட்டப்படி பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பொழுது கூட தீர்க்க முடியாத இந்த பிரச்சினையை தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அவர்கள் தீர்ப்பார் என அப்பகுதி மக்கள் திடமாக நம்புகிறார்கள்.

 

எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் அடிமனை பிரச்சினையை தீர்க்க ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை முதன்மை செயலாளர்கள் தலைமையில் திருச்சி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டவல்லூனர்கள், ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் பங்கேற்கும் சட்டபூர்வமான ஒரு குழுவை ஏற்படுத்தி ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகாவல் அடிமனை பிரச்சினையை தீர்க்க தகுந்த முன்னெடுப்புகளை ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்துகிறோம் என கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.