இன்று ஆட்சியரிடம் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், , புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், ஆகியோர் தலைமையில் SiR கணக்கீட்டு படிவங்களை திமுகவினர் விநியோகம் செய்வதாகவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் அதிமுகவினர் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கூட்டாக
பேட்டி அளித்த மாவட்ட செயலாளர்கள், வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை, Blo க்கு பதிலாக திமுகவினர் வாக்காளர்களிடம் நேரடியாக வழங்கி பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் , முன்னாள் அமைச்சர் எஸ் வளர்மதி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

