திருச்சி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக திமுக நிர்வாகி அளித்த மனு நிராகரிப்பு. எம்எல்ஏ பழனியாண்டியாவது ….?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அழுந்தூர் ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய சேசுராஜ்
நாகமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் பரிசோதனைக்காக மதியம் 2 மணி வரை வெயிலில் காத்து நிற்கின்றனர் , இதனால் அவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படுகிறது.

எனவே அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரத்தை சுத்தம் செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி மனு அளித்து இருந்தார் .
அந்த மனுவிற்கு வந்த பதிலில் அந்த ராணி மங்கம்மாள் சத்திரம் தொல்லியல் துறைக்கு கீழ் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கொடுத்த மனுவிற்கும் கிடைக்கப்பெற்ற பதிலுக்கும் என்ன சம்பந்தம் , பொதுமக்கள் தன்னிடம் நீ கொடுத்த மனு என்ன ஆயிற்று என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர் இந்த பதிலை ஆளும் கட்சியாக இருந்து கொண்டு தான் தெரிவிக்க முடியுமா என புலம்பி வருகிறார் .
மேலும் இந்த தொகுதி எம் எல் ஏ பழனியான்டி அவர்கள் இந்த மனுவிற்கு உடனடி தீர்வு காணும் படி கேட்டுக் கொண்டுள்ளார் .
தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு ராணி மங்கம்மாள் சத்திரத்தை சுத்தம் செய்து பராமரிப்பு செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது தனக்காக அல்ல பொதுமக்களுக்காகவே என கூறியுள்ளார் .

