Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை

பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

 

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் அன்னதானம்.

திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திருச்சி கீழ சிந்தாமணியில் ஓடத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின் முதல் நாளான சனிக்கிழமை

காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹாலெஷ்மி ஹோமம். பூர்ணா ஹீதி நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் நடந்தது.

 

நேற்று ஞாயிறன்று காலை பூர்வாங்கம், அக்குரார்ப் பணம், யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம், தீபாராதனை நடந்தது. மாலை மண்டபார்ச்சனை,

முதல் கால யாகசால பூஜை, வேத பாராயணம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது.

இன்று திங்களன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், மகாபூர்ணாஹீதி, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கடம் புறப்பாடு,மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நாகநாதன் மற்றும் கருணாகரன் ஓடத்துறைவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.