வாத்தலை அருகே
தனியார் சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து.
21 பேர் படுகாயம்.
கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு பெங்களூர் நோக்கி டிரைவர் உள்பட 31 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது.
இன்று அதிகாலை திருச்சி மாவட்டம், சேலம் நெடுஞ்சாலையில் சிலையாத்தி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பாயத்தில் அலறி துடித்து சத்தம் போட்டுள்ளனர்.
இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்து
விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கி இருந்த 31 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசாரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இளைஞர்கள் உதவியுடன் 31 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.இதில் படுகாயமடைந்த 21 பேர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

