பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
விமான நிலையத்திற்குள்ளே பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க கோரி
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சி
போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்குள்ளே பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்க கோரி
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் டிரைவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.அப்போது
அன்பில் பொய்யாமொழி நினைவு சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் திருச்சி விமான நிலையத்திற்கு உள்ளே பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்ல அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். தொடர்ந்து மனு அளிக்க வந்தவர்களில்,சங்கத்தின் செயலாளரான திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் பின்னர் அவரை கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். கலெக்டரிடம் மனு கொடுத்த பின்னர் ராஜேந்திரனை விசாரணைக்காக போலீசார் திருச்சி விமான நிலையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கார் டிரைவர் மற்றும் பியூட்டிஷியன் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் இன்று கலெக்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

