Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் வளாகத்தில் தீ குளிக்க முயன்ற அழகு நிலைய உரிமையாளர்…..

0

'- Advertisement -

முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.

 

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் அகல்கி என்ற அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. அழகு நிலையத்தின் உரிமையாளர் தேவி முன் தொகையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்து 12 வருடங்களாக இங்கு மாதம் வாடகை கொடுத்து அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர். ..

 

இந்நிலையில் இந்த கட்டிடத்தை மேம்படுத்துவதாக கூறி கட்டிடத்தின் உரிமையாளர் சில நாட்கள் நேரம் கேட்டு உள்ளார். அதுவரை அங்கு எந்த பணியும் நடைபெற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தற்போது வரை அவர் மேம்படுத்தி கொடுக்கவில்லை. அதற்கு மாறாக மாதம் வாடகை கொடுக்கப்பட்டு, குத்தகை காலம் 2028 வரை இருக்கும் நிலையில் கடையை காலி செய்வதற்கு வற்புறுத்துவதோடு அந்த கடையை இடித்து முற்றிலுமாக அகற்றி உள்ளனர். மேலும் குத்தகை பணத்தை திரும்ப தர மாட்டோம் என்பதுடன், எந்த முன் அறிவிப்பும் இன்றி கடையின் உள்ளே உள்ள பொருட்களையும், பணத்தையும் அள்ளிச்சென்று இருக்கின்றனர். இது குறித்து அழகு நிலையத்தின் உரிமையாளர் தேவி முதல்வர் தனி பிரிவு மற்றும் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக கட்டிடத்தின் உரினையாளர் பணத்தை கொடுக்க இயலாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், கட்டிடத்தை வாங்கி இருப்பவர் மிக பெரிய ஆள் என மிரட்டல் விடும் தோணியில் பேசி இருக்கிறார். இது தொடர்பாக அழகு நிலையத்தின் உரிமையாளர் தேவி தனது பணத்தை மீட்டு தர வேண்டும் கடையை சேதப்படுத்தி பொருட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.