திமுக ஆட்சியில் ரூ.500 மதிப்பில்லான நெல் வீணடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி..
தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுக் கால திமுக ஆட்சியில் நெல் கொள்முதலில் முறையான கட்டமைப்புகள் இல்லாததால், ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் பாஜக தமிழக தலைமை செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.
திருச்சி மாநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மிக மோசமான நிலையில் உள்ளது. முறையான கட்டமைப்புகள் இல்லாததால் நெல் வீணாகி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பிலான 3.75 லட்சம் டன் நெல் வீணடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கொள்முதல் செய்வதற்கும், அதை பாதுகாப்பதற்கும் மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதியளிக்கிறது. ஆனால், தமிழக அரசு உரிய கட்டமைப்புகளை உருவாக்காமல், நெல் கொள்முதலை முறையாக மேற்கொள்ளவில்லை. மழை வரும் என்று தெரிந்தும் நெல் கொள்முதலில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.
சாலைகள் மோசம்: தமிழகத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சமயபுரத்தில் இருந்து திருச்சி வருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இது, திருச்சியில் போக்குவரத்து நெரிசலும், சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளதைக் காட்டுகிறது.
திருச்சி மட்டுமல்லாமல், சென்னை, கோவை போன்ற நகரங்களிலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. திமுக ஆட்சியில் அடிப்படை வசதியான சாலைகள்கூட சீரமைக்கப்படவில்லை என்றாா் அவா்.

