திருவறும்பூரில்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிதி உதவி வழங்கினார்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து தெரு எண் மூன்றில் வசித்து வரும் எபினேசர் ஏசுதாஸ் அவர்களின் வீடு மழையின் காரணமாக இடிந்தது. இதை அறிந்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் .

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், வட்டாட்சியர் விக்னேஷ், துணை ஆணையர் சரவணன், பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ்,
மாமன்ற உறுப்பினர் பியூலா மாணிக்கம், வட்டச் செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

