திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இதய தெய்வங்கள் புரட்சிதலைவர் MGR புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக ஆசியுடன் சட்டமன்ற பொதுச்செயலாளர் எதிர்கட்சிதலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடிய பழனிசாமி பின் ஆணைக்கிணங்க 54ஆம் ஆண்டு கட்சி தொடக்கவிழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவடம் சார்பில் நாளை 17.10.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் BHEL திருவெறும்பூர் புரட்சிதலைவர் MGR புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக, மாநில சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், வீரங்கனைகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கழக நிர்வாகிகள், இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் MGR புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படத்திற்கு அந்தந்த பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். என திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .