Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சி . அனைத்து கட்சியினர் நேரில் வாழ்த்து .

0

'- Advertisement -

திருச்சி அதிமுக அம்மா பேரவை துணை செயலாளரும், கூட்டுறவு துறை முன்னாள் துணை தலைவருமான ஒத்தக்கடை SMT மணிகண்டனின் மகள் எம்.கீர்த்தியின் பூப்புனித நீராட்டு விழா திருச்சியில் இனிதே நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , சேகர் அருண், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, நல்லுசாமி , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் , கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி. ரத்தினவேல் , திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர்  ஜெ. சீனிவாசன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் , கவுன்சிலர் அரவிந்தன் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன், உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த அனைத்து பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், தினமலர் உரிமையாளர் ராமசுப்பு (எ) பாலாஜி, வியாபார சங்கத் தலைவர் கோவிந்தராஜுலு, தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் , சமயபுரம் கோயில் அறங்காவலர் இளங்கோவன் , பிரபல மருத்துவர் கஸ்தூரி, பல மருத்துவர்களும் பொறியாளர்களும் , நண்பர்கள் உற்றார் உறவினர்கள்   என பலரும் கலந்து கொண்டனர் .

 

எஸ் எம் டி மணிகண்டன் இரண்டு முறை கூட்டுறவு துணைத் தலைவராக பணியாற்றியவர். அனைத்து கட்சியினரிடமும் எந்தவித பாகுபாடும் இன்றி பழகுபவர் . இதனால் அனைத்து கட்சியினரும் வருகை தந்து அவரது மகள் எம். கீர்த்தியை வாழ்த்தி சென்றனர் .

 

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் வட்ட செயலாளர் ஒத்தக்கடை மகேந்திரன், மற்றும் சின்னம்மா பேரவை ஒத்தக்கடை செந்தில் ஆகியோர் வரவேற்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.