திருச்சி காந்திமார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பலமுறை அறிவித்து விட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட் யாருக்காக கட்டப்படுகிறது என்பதை மாவட்ட, நிர்வாகம் தெளிவாக விளக்க வேண்டும். அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று 30/8/2025 சனிக்கிழமை மாலை 7.00 மணி அளவில் திருச்சி தஞ்சை ரோடு வலிமா ஹாலில் நடைபெற்றது.
தலைவர் .எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை ஏற்க, பொருளாளர் எஸ்.வி.எஸ். வெங்கடாசலம் , மற்றும் அவைத்தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலளார் என்.டி.கந்தன் வரவேற்புரையாற்றினார் .
இந்த கூட்டத்பிற்கு (12) துணைத்தலைவர்சள், (13) இணைச் செயலாளர்கள் (55) கமிட்டி உறுப்பனர்கள் வருகை புரிந்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது அவை வருமாறு :-
தீர்மானம்.1 )
20.8.2025 அன்று நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தின் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் விதமாக 22.8.2025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, ஆனையர், மேயர் மற்றும் அதிகாரிகள் முன்னினையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி காந்தி மார்க்கெட் ரூபாய் 50. கோடி செலவில் புதுப்பிக்க பட்டு தொடர்ந்து இங்கேயே தான் செயல்ப்படும், காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது என்று வாக்குறுதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
தீர்மானம் 2.
கடந்த 04.8.2025 அன்று
தேதி: /மண்டலம் 2. உதவி ஆணையர் தலைமையில் காந்தி மார்கெட் வியாபாரிகள் காந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் காந்தி மார்க்கெட் சாலைகள் சீரமைப்பு சாக்கடை தூர்வாரும்பணி நடை பெறவில்லை என்பதை வன்மையைாக கண்டிக்கின்றோம் , மேலும், தமிழக அரசின் தலைமைக்கு எடுத்து செல்வது என (அ) போராட்டம் அறிவிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீர்மானம். 3
திருச்சி காந்திமார்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பலமுறை அறிவித்து விட்டு பஞ்சப்பூரில் புதிய காய்கறி மார்க்கெட்டு யாருக்காக கட்டப் படுகிறது என்பதை மாவட்ட, நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் எதையும், சென்ற ஆட்சியில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்கெட் கட்டும்பொழுது இதே பாணியைத் தான் கடைபிடித்து. கட்டி முடித்த பின் மார்கெட் வியாபரிகளை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யத் துடித்தார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு,
காந்தி மார்க்கெட் வியாபாரிகளையும் , தொழிலாளர்களையும் ,பொதுமக்களையும் திசை திருப்பி மீண்டும், மீண்டும் முதுகில் குத்தி துரோகம் செய்ய நினைத்தாலும் முயற்சி செய்தாலோ
2026. சட்டமன்றத் தேர்தலில் வரும் சரியான எதிர்வினை கிடைக்கும் என்றும், காந்தி மார்க்கெட் விஷயத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், தேர்ததுக்குப் பின்பும், வாக்குறுதி அளித்தவற்றை மாற்றி செயல்பட்ட அரசியல் பெருமக்களுக்கு, வியாபாரிகளும், தொழிலாளர்களும் , பொதுமக்களும் படைத்த இறைவனின் கருணேயோடு எந்தவித பாடம் திருப்பித் தருகிறார்கள் என்பதை கடந்த 20 ஆண்டுகளாக மாறி மாறி பொதுமக்களால் உணர்த்தப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்து, பாவத்திற்கும், சாபத்திற்கு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் ஆளாக வேண்டம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் 4:
20.நபர்கள் கொண்ட குழு ஒன்று இன்றைய கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இந்தக் குழுயில் உள்ள இருபது. வியாபாரிகளும் இனி வரும் காலங்களில்
நமது கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .