திருச்சி 20வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு
உட்பட்ட 20 வது வார்டில் மக்களுடன் ஸ்டாலின் முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் உள்ள 13 துறைகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை , எரிசக்தி துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை .மாற்றுத்திறனாளிகள் நலத்துறை . ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை , சிறப்புத்திட்ட செயலாற்ற துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43 சேவைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருவதை அதிகாரிகளிடம் கேட்டு பொதுமக்களிடம் பெரும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு எட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருதய ராஜ் எடுத்துரைத்தார் .
இம்முகாமில் 20வது வார்டு வட்ட செயலாளர் ஏ எஸ் செந்தில்குமார். எஸ் எஸ் சுருளி ராஜன் அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா மற்றும் துணை ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இணைந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்