திருச்சி அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் பதிவில் கூறியிருப்பதாவது :-
பாலக்கரை காவல் நிலையத்தில் நான் ஒரு நபர் மீது புகார் கொடுத்தேன், இன்ஸ்பெக்டர் அதனை பெற்றுக் கொண்டார். ஆனால் 4/8/2025 அன்று கொடுத்த புகார் சம்பந்தமாக கால தாமதமாகவும் 7/8/2025 அன்று மனு ரசிது வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட எதிர் தரப்பு நபரை விசாரித்து கடந்த 11/8/2025 அன்று வீடியோவும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 16/8/2025 தேதி எதிர் மனுதாரரிடப் வேண்டுமென்றே பொய் புகார் ஒன்றை வாங்கிக் கொண்டு பாலக்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், எஸ்ஐ அபிராமியும் அலைக்கழித்து வருகின்றனர் .
விசாரணையில் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை பற்றியும், வேறு ஒருவர் மீது புகார் கொடுத்த சம்பந்தமே இல்லாத வழக்கை பற்றியும் இன்னும் இன்னும் கேட்டு அச்சுறுத்தி வருகின்றனர்.
இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் புகார் கொடுத்தால் எடுக்க மாட்டோம் என்றும் எத்தனை புகார்கள் தான் கொடுப்பீர்கள் என்றும் இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ பதிவும் உள்ளது. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு பெண் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அனைத்து ஆதாரங்களை தந்த போதிலும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.சட்டக் கல்லூரி மாணவி எனக்கே இந்த கதியா என கேட்டுள்ளார்?