பொன்மலை, பாலக்கரையில்
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் மற்றும் லாட்டரி விற்றவரும் கைது.
திருச்சி பொன்மலை, பாலக்கரை பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்றதாக ஜிஷ்ணு என்ற வாலிபரும், மேலப்புதூர் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்றதாக துவாரகன் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சரவணன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.