திருச்சி சித்தார், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு நிரந்தர தடை பூவ பூனும் சொல்லலாம் புய்ப்பமுன்னும் சொல்லலாம்… கிட்னி திருட்டை இப்படியும் சொல்லலாம் திமுக எம்எல்ஏ கதிரவனின் புது விளக்க வீடியோ.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி ( தற்போது கல்லீரல் திருட்டு புகார் வந்துள்ளது ) வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி சித்தார் மருத்துவமனை பற்றி கிட்னியை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் பகிர் புகார் அளித்தனர் .
நாமக்கல் மாவட்டத்தில் கடன் கஷ்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை கட்டி கிட்னி ஒன்றுக்கு ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த கிட்னி ஏஜென்ட் ஆனந்த் என்பவர் ரூபாய் 10 லட்சம் பேசி ரூ.5 லட்சம் மற்றும் கொடுத்ததாகவும் மீதி 5 லட்சத்தை அவர் ஆட்டையை போட்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து இருந்தார் .
இந்த கிட்னி திருட்டு சம்பவம் குறித்து மத்திய அரசின் மருத்துவக் குழு திமுக எம்எல்ஏ கதிரவனின் மருத்துவக் கல்லூரியிலும், நாமக்கல் மருத்துவமனையிலும் . திருச்சி சிதார் மருத்துவமனையிலும் , தஞ்சாவூர் மருத்துவமனையிலும் சோதனை மேற்கொண்டனர் .உள்ளனர்.
ஆளுங்கட்சி ஆதரவுடன் கிட்னி திருட்டில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி செலவு செய்து மருத்துவ வளாகம் கட்டி வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் .
மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது .
இந்த கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்கள் திருச்சியில் முக்கிய பகுதியில் உள்ள ஏரியாவில் தனியாக வீடு எடுத்து கிட்னி தானமாக பெறுபவரும் கிட்னி விற்பனை செய்பவர்களும் இந்த வீட்டில் கிட்னிக்கு எவ்வளவு என்று பேரம் பேசி செட்டில்மெண்ட் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கோ- ஆர்டினேட்டர் ( உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர்) இவர்கள்தான் கஷ்டப்படும் நபர்களிடமிருந்து கிட்னியை பெற்று 40 லட்சம் 50 லட்சம் தரும் நபர்களிடம் விற்று வருகிறார்கள் .
இதில் முன்னணியில் இருப்பவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி கோ. ஆர்டினேட்டர் கதிரவன், ஏஜென்ட் திமுகவை சேர்ந்த ஆனந்த், சிதார் மருத்துவமனையில் செய்தி தொடர்பாளராக பணி புரிந்த சரவணகுமார் , திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சேர்ந்த மாரிச்செல்வன் . கிம்ஸ் மருத்துவமனை தமிழ்ச்செல்வன் மற்றும் நாமக்கல் அபிராமி மருத்துவமனை உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் இவர்களை ஒருங்கிணைந்து வழிநடத்துவது திருச்சி சித்தார் மருத்துவமனை கோஆர்டினேட்டர் ஜோசப் . இவர் திருச்சியில் முக்கிய ஏரியாவில் தனியாக வீடு எடுத்து (ரூ. 20000 ரூபாய் வாடகை ) கிட்னியை தானமாக அளிப்பவர்களையும் உடல் உறுப்பை தானமாக பெறுபவர்களையும் அழைத்து ஒன்றாக பேசி செட்டில்மெண்ட் செய்து வருகிறார்கள் . தனலட்சுமி சீனிவாசன் உள்ளிட்ட உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் முறைப்படி மருத்துவ கமிட்டியில் அனுமதி வாங்கி உடப்பு தானம் பெறுவது செய்வது அனைத்திற்கும்் டாக்குமெண்டுகள் இருக்கும் . ஆனால் உடல் உறுப்பை பெறுபவர் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், உடல் உறுப்பை தானமாக கொடுப்பவர் வயிற்று வலி சிகிச்சைக்காக என அனுமதிக்கப்படுவார் , இரண்டு முன்று நாட்களில் கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ( திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவமனை இயக்குனர் மற்றும் தில்லைநகரில் உள்ள அமைச்சர் நேருக்கு நெருக்கமானவரின் மருத்துவமனையில் பணியாற்றுபவர் ) உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வருகை புரிந்து மாற்று அறுவை சிகிச்சை செய்து அதற்குரிய பணக்தை பெற்றுக்கொண்டு சென்று விடுவார் . அவர் வந்து செல்ல முழு செலவு ( ஓட்டலில் தங்க , தண்ணி , மேலும் பல பல ) உறுப்புகள் பெற்றவர்கள் செலவு செய்வார்கள் .
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி , தில்லைநகர் சிதார் மருத்துவமனை, நாமக்கல் அபிராமி மருத்துவமனை ஆகியவற்றுக்கு தமிழக மருத்துவ அதிகாரிகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தற்காலிக தடை விதித்து முழு விசாரணைக்கு பின்னர் நிரந்தர தடை விதித்து உள்ளனர் .
ஆனாலும் இந்த வீட்டில் கிட்னி விற்பனை வியாபாரம் குறித்த டீலிங் இன்றும் ஜரூராக நடைபெற்று வருகிறது .
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க மாநில அளவில் புதிய குழு அமைக்க சுகாதரத்துறை திட்டமிட்டுள்ளது.
கிட்னி பறிப்பு குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக புகார் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது :-
முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 22ம் தேதி விசாரணை தொடங்கப்பட்டன. இந்த விசாரணையின்போது மீனாட்சி சுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மாரிமுத்து, பெரம்பலூர் (ம) அரியலூர் இணை இயக்குநர் நலப்பணிகள் உள்ளிட்ட இதர மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த விசாரணையில் மனித உறுப்பு மாற்றுச் சட்டத்திற்கு முரணாக சான்றுகள் பெறப்பட்டு, சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தி, சில இனங்களில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என அறிக்கையில் திட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இதில் விசாரணையின் அடிப்படையில் அங்கீகாரக் குழுவிற்கு பரிந்துரைகள் வழங்கி, திட்ட இயக்குநர் அளித்த அறிக்கை விவரம்:
* திருச்சி சித்தார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் உள்ள திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைகளிலிருந்து, அரசு அங்கீகார குழுவிற்கு பரிந்துரை செய்த ஆவணங்கள், தனியார் மருத்துவமனையின் ஒப்புதலோடு முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு ஆவணங்களை தயார் செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த Transplant Coordinator ( சித்தார் மருத்துவமனை ஜோசப் போன்றோர் , மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியினை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
* விசாரணை அறிக்கையில், இரு தரகர்கள் (ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன்) இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிகிறது. அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய பரிந்துரை செய்யப்படுகிறது.( இதுவரை FIR பதியப்பட்டதா என்பது தெரியவில்லை ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை )
* தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் இயக்குநர் மூலம் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரசு
* .கவனமாக பரிசீலனை செய்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
* திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை ஆகியவற்றின் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உரிமத்தினை, ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதனை சீரமைத்து, மாவட்டக் குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள நான்கு குழுக்களை மறுசீரமைப்பு செய்யவும் அரசால் உரிய ஆணைகள். வெளியிடப்படும்.
* மாவட்ட அளவிலான அங்கீகாரம் வழங்கும் குழுக்களின் பணி நடைமுறைகளை மேலும் சீராக்கவும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள ஏற்பாளர்களுக்கும் மற்றும் கொடையாளிகளுக்கும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கும் குழுவால் அனுமதி வழங்குவதற்கு முன், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்குவது குறித்த நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedures) உருவாக்கி செயல்படுத்தவும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் வெளியான பின்பு சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணச்சநல்லூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் கதிரவன் பேசிய வீடியோ வெளியானது . அதில் 252 பேருக்கு கிட்னி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் இதனால் 252 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இரண்டு
முதல் மூன்று லட்சம் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும் என கூறியுள்ளார் .
252 பேர் கிட்னியை அறுவை சிகிச்சை செய்து எடுத்தது அவர்கள் பாதிப்படைந்தது பற்றி அவருக்கு கவலை இல்லை . அதுதான் கிட்னி திருட்டை சேவை என என்று கூறியுள்ளார் இது திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் அண்ணே பூவ பூய்யம் என்றும் சொல்லலாம் . நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் என சொல்லுவார் அதுபோன்று உள்ளது .
இந்த சம்பவம் குறித்து திருச்சி சித்தார் மருத்துவமனை கோஆர்டினேட்டர் ஜோசப் மற்றும் மேலாளர் கர்ணன் ஆகியோரிடம் விசாரணை செய்த திருச்சி எக்ஸ்பிரஸ் நிருபர்கள் ரூ. 5 லட்சம் , ரூ. 10 லட்சம் வாங்கி விட்டதாக சிலர் தூக்கி எறியும் எலும்பு துண்டுகளை கவ்விச்செல்லும் சில நாய்கள் அவதூறு பரப்பி வருகின்றன .