திருச்சியில் ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி .
79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி .
திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது .
இப்போட்டியினை சிலம்ப ஆசான் அ.குமரேசன் நிறுவனர் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் அவர்கள் தலைமை வகித்தார் .
இப்போட்டியினை திமுக கலை இயக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் புதுகை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான செ.எழில்மாறன் செல்வேந்திரன் மற்றும் 9 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.நாகலட்சுமி நம்பி அவர்கள் சிலம்பப் போட்டியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர் .
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.பழனியாண்டி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்
மேலும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் , மெடல் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது .