திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்.
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,
கழக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட செயலாளர் P.தங்கமணி அறிவுறுத்தலின்படி..
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் தலைமையில்
இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் ரவி மினி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் , அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் , மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன் , ஜாக்குலின் , மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.