Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் நேருவின் சொந்த தொகுதியில் உயிர் பலி வாங்கும் சாலையை உடனடியாக போட வேண்டும். அனைத்து கடை வியாபாரிகள் கோரிக்கை.

0

'- Advertisement -

அமைச்சர் கே என் நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உயிர் பலி வாங்கும் வகையில் உள்ள திருச்சி வயலூர் சாலையை உடனடியாக போட வேண்டும்.

 

மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து கடை வியாபாரிகள் கோரிக்கை மனு.

 

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில்

தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள்

திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுமார் கடந்த 2 வருடமாக இந்த புத்தூர் 4 ரோட்டில் இருந்து இரைட்டை வாய்க்கால் வரை மாநகராட்சி பாதாளசாக்கடை பணி நடைபெற்றதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இது சம்பந்தமாக கடந்த 2 வருடத்திற்கு முன்பாகவே நாங்கள் தார்சாலை அமைத்து தருமாறு அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் புத்தூர், பாரதிநகர், குமரன்நகர், சீனிவாசநகர், ராமலிங்கநகர், அம்மையப்ப நகர், கீதாநகர், சன்முகா நகர், உய்யக்கொண்டான் திருமலை, இரட்டை வாய்க்கால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மாபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தோம். அத்துடன் அமைச்சர் , அன்றைய மாநகராட்சி ஆணையர் , மேயர் அனைவரிடமும், முறைப்படி மனு அளித்தும் அதன் அடிப்படையில் அப்போது தற்காலிகமாக சாலை போட்டார்கள். மீண்டும் மாநகராட்சி பாதாளசாக்கடை பணிகள் ஆரம்பித்ததால் பிஷப் ஹிபர் கல்லூரி, சீனிவாசநகர் ஓம்சக்தி கோவில் அருகில், மற்றும் ஒரு சில இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ஆனால், இப்போது இந்த ரோடு படுமோசமாக இருக்கிறது இது வரை இந்த வயலூர் சாலையில் பத்திற்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இதன் மூலம் 5 உயிர்களுக்கு மேல் பலியாகி உள்ளார்கள். எனவே, இதை எல்லாம் கருத்தில் எடுத்து கொண்டு உடனடியாக இந்த வயலூர் சாலையை உடனடியாக ரோடு போட்டு தந்து, தற்போது நடக்கும் விபத்துகளுக்கும். உயிர் பலிகளுக்கும், நிரந்தர தீர்வு கண்டு பொதுமக்களுக்கும். வியாபாரிகளுக்கும், விடிவு காலத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

அமைச்சரின் சொந்த தொகுதி என்பதால் கே என் நேரு உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என வியாபாரிகள் எதிர்பார்ப்பு .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.