மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் நாமக்கலை சேர்ந்த ஏழை எளிய பெண்களிடம் ரு.5 முதல் 10 லட்சம் வரை தருகிறேன் எனக்கூறி கிட்னி விற்பனை நடைபெற்றது தெரியவந்தது .
இந்த கிட்னி விற்பனையில் ஈடுபடுபவர்கள் திருச்சியில் முக்கிய பகுதியில் உள்ள ஏரியாவில் தனியாக வீடு எடுத்து கிட்னி தானமாக பெறுபவரும் கிட்னி விற்பனை செய்பவர்களும் இந்த வீட்டில் கிட்னிக்கு எவ்வளவு என்று பேரம் பேசி செட்டில்மெண்ட் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கோ- ஆர்டினேட்டர் ( ஒருங்கிணைப்பாளர்) இவர்கள்தான் கஷ்டப்படும் நபர்களிடமிருந்து கிட்னியை பெற்று 40 லட்சம் 50 லட்சம் தரும் நபர்களிடம் விற்று வருகிறார்கள் .
இதில் முன்னணியில் இருப்பவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி கோ. ஆர்டினேட்டர் கதிரவன், ஏஜென்ட் திமுகவை சேர்ந்த ஆனந்த், சிதார் மருத்துவமனையில் செய்தி தொடர்பாளராக பணி புரிந்த சரவணகுமார் , அரசு மருத்துவமனை சேர்ந்த மாரிச்செல்வன் . கிம்ஸ் மருத்துவமனை தமிழ்ச்செல்வன் மற்றும் நாமக்கல் அபிராமி மருத்துவமனை உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைந்து திருச்சியில் முக்கிய ஏரியாவில் தனியாக வீடு எடுத்து (ரூ. 20000 ரூபாய் வாடகை ) கிட்னியை தானமாக அளிப்பவர்களையும் உடல் உறுப்பை தானமாக பெறுபவர்களையும் அழைத்து ஒன்றாக பேசி செட்டில்மெண்ட் செய்து வருகிறார்கள் . தனலட்சுமி சீனிவாசன் உள்ளிட்ட உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் முறைப்படி மருத்துவ கமிட்டியில் அனுமதி வாங்கி உடப்பு தானம் பெறுவது செய்வது அனைத்திற்கும்் டாக்குமெண்டுகள் இருக்கும் . ஆனால் உடல் உறுப்பை பெறுபவர் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், உடல் உறுப்பை தானமாக கொடுப்பவர் வயிற்று வலி சிகிச்சைக்காக என அனுமதிக்கப்படுவார் , இரண்டு முன்று நாட்களில் பெங்களூரில் இருந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர் வருகை புரிந்து மாற்று அறுவை சிகிச்சை செய்து அதற்குரிய பணக்தை பெற்றுக்கொண்டுடு சென்று விடுவார் . அவர் வந்து செல்ல முழு செலவு ( ஓட்டலில் தங்க , தண்ணி , மேலும் பல பல ) உறுப்புகள் பெற்றவர்கள் செலவு செய்வார்கள் .
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி , தில்லைநகர் சிதார் மருத்துவமனை, நாமக்கல் அபிராமி மருத்துவமனை ஆகியவற்றுக்கு தமிழக மருத்துவ அதிகாரிகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தற்காலிக தடை விதித்து உள்ளனர் .
ஆனாலும் இந்த வீட்டில் கிட்னி விற்பனை வியாபாரம் குறித்த டீலிங் இன்றும் ஜரூராக நடைபெற்று வருகிறது .
இந்த வீடு எங்கு அமைந்துள்ளது , இங்கு நடைபெறும் விபரம் என்ன என்பது குறித்து மத்திய சுகாதார அதிகாரிகள் கேட்டால் முழு விவரம் அளிக்க தயாராக உள்ளது திருச்சி எக்ஸ்பிரஸ் குழு .
அடுத்த பதிவில் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கிடாவர்
(CADEVER) முழு உடல் உறுப்பு தானம் மேற்கொண்ட குடும்பத்தாருக்கு ரூ.40. லட்சம் அளித்த நிர்வாகம் பற்றிய முழு தகவல் வெளிவரும்.