திமுக எம் எல் ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கு தடை விதித்து ஆப்பு வைத்த தமிழக அரசு.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் பிரபல தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருடும் கும்பல் நடமாடி வருகிறது. பள்ளி பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிட்னி பாளையம் என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது.
புரோக்கர் கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களை குறிவைத்து தான் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
ஏழ்மையான பின்னணி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள் அவர்களது சிறுநீரகங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களது சிறுநீரகங்கள் எடுக்கப்படுகிறது.
பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது. இதுதொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப., அவர்களை நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், மரு.இரா. ம. மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை, மரு.ராஜ்மோகன், இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல், மரு.கே. மாரிமுத்து, இணை இயக்குநர் நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, திருச்சி சிதார் மருத்துவனை, மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர்.
இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை மரு.எஸ்.வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, மற்றும் திருச்சி சிதார் மருத்துவனை, ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.
கிட்னி ஏஜென்ட் திமுக பிரமுகர் ஆனந்த்
நாமக்கல் அபிராமி மருத்துவமனைக்கும் ஏற்கனவே தடை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . கிட்னி விற்பனை நடைபெற்றது தெரிய வந்தால் தனலட்சுமி சீனிவாசன், அபிராமி,. சிதார் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க மருத்துவத்துறைக்கு அதிகாரம் உண்டு .
ஆனால் இதில் மனச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி சிக்காது . ஏனென்றால் நாங்கள் மருத்துவ கல்லூரியை மட்டுமே நிர்வாகித்து வருகிறோம் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் குறிப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கோ ஆர்டினேட்டர் கதிரவனை காட்டிக் கொடுத்து கிட்னி பிரிவில் பணிபுரியும் அனைவரையும் இந்த நடவடிக்கை வேண்டுமல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என நிர்வாகம் ஆளுங்கட்சி துணையுடன் தப்பித்துக் கொள்ளும் . ஆனால் மற்ற இரண்டு மருத்துவமனைக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீல் வைப்பது உறுதி.