தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்துள்ள நிலையில்,
சுற்றுப்பயணத்தின் முதல் வாரத்திலேயே திமுக கூட்டணியில் இருந்த விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட 3 கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். பின்னர் வெளிப்படையாகவே தவெக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டியில், அமமுக கூட்டணியில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது முதலே எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதை டிடிவி தினகரன் நிறுத்தி கொண்டார்.
அதிமுக தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை, எடப்பாடி பழனிசாமிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று டிடிவி தினகரன் கூறி இருந்தார். இதனால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
தற்போது டெல்லி மேலிடத்தின் உத்தரவின் படி ஓபிஎஸ் அணியினர் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளனர் . அதன்படி அதிமுகவின் பொருளாளராக பொறுப்பேற்க உள்ளார் ஓ.. பன்னீர்செல்வம் ,வைத்தியலிங்கம் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆகிறார் . முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கழக அமைப்பாளர் ஆகிறார். இதுபோன்று முக்கியஸ்தர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளது . அதேபோன்று வரும் சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்புக்கு 5 எம்எல்ஏகள் சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த இணைப்பு குறித்து விரைவில் அதிமுக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது . விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் பிரிந்துள்ள அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவர உள்ள செய்தி அதிமுகவினரை உற்சாகம் அடைய செய்யும் என கூறப்படுகிறது .