திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமில். கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் ரத்த தானம் வழங்கினர் .
உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தனியார் பார்மசி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
ரத்ததான முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு எம்.கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன் குற்றவியல் வழக்கறிஞர்க சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் வெங்கட், துணைத் தலைவர் வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, கௌசல்யா உள்பட பட கலந்து கொண்டனர் .
இந்த ரத்த தான முகாமில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் . முகாமிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.