Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ்.பி. ஸ்பெஷல் டீம் மூலம் லஞ்சம் வாங்கி வருகிறார். 23 பார்களுக்கு சீல் வைத்து, 700 பேர்களை கைது செய்த நடந்து பணிக்கு வரும் டிஎஸ்பி பரபரப்பு பேட்டி .

0

'- Advertisement -

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை டிஎஸ்பி சுந்தரேசச் சிறையில் அடைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.இப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில்

 

4 மாதமாக தனக்கு சம்பளம் போடவில்லை என்று மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

 

விஆர்எஸ் வாங்க முடிவெடுத்து போதும் கடைசி நேரத்தில் எஸ்பி விடவில்லை என்று கூறிய சுந்தரேசன், ஸ்பெஷல் டீம் மூலமாக அவர் லஞ்சம் பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

 

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அரசு வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதன்பின் உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்று டிஎஸ்பி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகியது.

 

இதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து டிஎஸ்பி சுந்தரேசன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சில அதிகாரிகள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய பின், மயிலாடுதுறைக்கு 2024, நவம்பர் மாதம் வந்தேன்.

 

நான் சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். ஆனால் மார்ச் மாதம் வரை எனக்கு சம்பளம் போடவில்லை. இதுதொடர்பாக எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளேன். இவையனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விஆர்எஸ் கொடுத்துவிட்டேன். அப்படிக் கொடுத்தால், 3 துறைகள் சார்பாக விசாரிப்பார்கள்.

 

நற்சான்றிதழ் இருந்தால் உடனடியாக விஆர்எஸ் கொடுத்துவிடுவார்கள். 3 துறைகளிலும் விசாரித்து எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லையென்று தெரிந்த பின், ஏப்ரல் மாதத்துடன் வேலையில் இருந்து போகவிருந்தேன். ஆனால் மார்ச் மாதம் மாவட்ட எஸ்பி அழைத்து அறிவுரைகளை அளித்தார். அதன்பின் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்கிறார்கள்.

 

என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது யார் தெரியுமா? இந்த எஸ்பி, காவல் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் என்று சொல்லுவதற்கு லாயக்கில்லை.. ஏடிஜிபி சட்டம் – ஒழுங்கு, ஐஜி மற்றும் எஸ்பி ஆகிய மூவரும் நின்று பேச வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்று நன்றாகத் தெரியும். போலீஸ் விதிகளில் இது மிகப்பெரிய தவறு.. தெரியாமல் பேசவில்லை.

 

இந்த அதிகாரிகளுக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை இப்படிப் பேசுவதற்குத் தூண்டிவிட்டார்கள். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கும் வரை, என்னை மாதிரியான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். அஜித் குமார் வழக்கில் மேல் அதிகாரிகளின் தவறான உத்தரவால், அனைத்து போலீஸ் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

 

இதே எஸ்பி-யும் அதனைத்தான் செய்து வருகிறார். சிறப்பு டீம் ஒன்றை வைத்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சிறப்பு டீம் யாரென்று மேல் அதிகாரிகள் விசாரித்தால் தெரியும். எந்த விசாரணையாக இருந்தாலும், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.